Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 76

கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம்.

யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்;

இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.

அவருடைய கூடாரம் சாலேமில்1 இருக்கிறது;

அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது.

அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும்,

கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.

நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்;

வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர்.

வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு,

அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்;

போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை

உயர்த்த முடியாமலிருக்கிறான்.

யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில்

குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.

நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்;

நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?

நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்;

பூமி பயந்து அமைதியாய் இருந்தது.

இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக

நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.

நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம்

உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது;

உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.

உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து,

அவைகளை நிறைவேற்றுங்கள்.

அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான

அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும்.

அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்;

பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.

Source notes (1)
  1. Footnote சாலேமில் என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் எருசலேம்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.