Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 110

தாவீதின் சங்கீதம்.

யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது:

“நான் உமது பகைவரை

உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை

நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”

யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்;

“நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”

உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில்,

தாங்களாகவே முன்வருவார்கள்;

அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல்

உமது வாலிபர்கள்

பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.

“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி,

நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்”1

என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்;

அவர் தமது மனதை மாற்றமாட்டார்.

யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்;

அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.

அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்;

இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.

வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்;

ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.

Source notes (1)
  1. Footnote எபி. 5:6

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.