Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 67

கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக;

அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.

இறைவனே, உமது வழிகள் பூமியிலும்,

உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.

இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;

எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.

நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து,

பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால்,

மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.

இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;

எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.

அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்;

இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்;

ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.