Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம் 29
தாவீதின் சங்கீதம்.
பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்;
அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.
யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது;
மகிமையின் இறைவன் முழங்குகிறார்;
பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.
யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது;
யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.
யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது;
யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.
அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும்,
சிரியோன்1 மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
யெகோவாவினுடைய குரல்
மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.
யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது;
காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.
யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது.
காடுகளை அழித்து வெளியாக்குகிறது;
அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.
யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;
யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்;
யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.
Source notes (1)
- Footnote அதாவது, எர்மோன் மலை
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.