Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 129

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று

இஸ்ரயேலர் சொல்லட்டும்;

“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்,

ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.

உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,

தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்;

அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”

சீயோனை வெறுக்கிற அனைவரும்

வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.

அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்;

அது வளரும் முன்பு வாடிப்போகுமே.

அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது;

அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.

வழிப்போக்கர்கள் அவர்களிடம்,

“யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்;

யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்”

என்றும் சொல்லாதிருக்கட்டும்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.