Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 128

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்

அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்;

ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.

உன் மனைவி உன் வீட்டிற்குள்

கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்;

ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல்,

உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.

ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன்

இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக;

உன் வாழ்நாட்களெல்லாம்

எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.

நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக;

இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.