Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 112

அல்லேலூயா.

யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும்,

அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்;

நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்;

அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.

நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்;

ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.

தாராள மனதுடன் கடன்கொடுத்து,

தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.

நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்;

நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.

துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது;

அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.

அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது;

கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.

அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்;

அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது;

அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.

கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்;

அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்;

கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.