Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 63

யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல்.

தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;

வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,

என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.

இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து,

உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

உயிரைவிட உமது கிருபை நல்லது;

என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.

என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,

உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.

நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;

என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,

இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,

உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.

என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;

உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ,

பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

அவர்கள் வாளால் விழுவார்கள்;

நரிகளுக்கு இரையாவார்கள்.

ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;

தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்

அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;

பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.