Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 54

தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,

உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.

தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.

அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;

கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்;

தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)

இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;

ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.

அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார்,

உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.

உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;

யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.

அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;

என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.