Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 114

இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,

யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,

இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.

கடல் கண்டு விலகி ஓடினது;

யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,

குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;

யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;

மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,

நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும்,

உங்களுக்கு என்ன வந்தது?

பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,

யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,

கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.