Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 10

யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்?

துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால்

ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்;

அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான்,

பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.

துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்;

அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.

அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;

உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன;

தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.

நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை

என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும்,

கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது;

அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.

கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து,

மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்;

திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.

தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்;

ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.

தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து,

எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்;

தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.

யெகோவாவே, எழுந்தருளும்;

தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்;

ஏழைகளை மறக்காமலிரும்.

துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து,

நீர் கேட்டு விசாரிப்பதில்லை;

என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?

அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும்,

துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே;

நீர் பதிலளிப்பீர்;

ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்;

திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.

துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்;

அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.

யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்;

அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.

யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்;

அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.

மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல்,

தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும்

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய

உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.