Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

யோபு 18

பில்தாதின் வார்த்தைகள்

அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:

“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்?

புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.

நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு,

உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?

கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ?

கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?

துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்;

அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.

அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்;

அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.

அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.

அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,

வலையின் சிக்கலிலே நடக்கிறான்.

கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்;

பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.1

அவனுக்காகச் சுருக்கு தரையிலும்,

அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து,

அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.

அவன் பசியினால் பெலனற்றுப்போவான்;

அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.

அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்;

பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.

அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்;

அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.

அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால்,

பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்;

கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.

கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்;

மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.

அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும்,

வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.

அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு,

பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை;

அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.

அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல,

கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.2

அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்;

தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.

Source notes (2)
  1. Footnote அவர்கள் அவர்களை ஜெயித்தார்கள்
  2. Footnote மேற்கிலிருந்த மக்கள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.