Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

யோபு 17

என் ஆவி உடைகிறது1, என் ஆயுசு நாட்கள் முடிகிறது;

கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.

கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?

அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.

தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,

எனக்காகப் பிணைக்கப்படுவீராக;

வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?

நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;

ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.

எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,

அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.

மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;

அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.

இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;

என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.

சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;

குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.

நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;

சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;

உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.

என் நாட்கள் முடிந்தது;

என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.

அவைகள் இரவைப் பகலாக்கியது;

இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.

அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,

பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்;

இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;

புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

என் நம்பிக்கை இப்போது எங்கே?

நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?

அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;

அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.

Source notes (1)
  1. Footnote என் ஆவி நொறுங்கி விட்டது.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.