Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 98

சங்கீதம்.

யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்;

அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே

இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது.

யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி,

தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார்.

அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த

தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்;

பூமியின் எல்லைகள் எல்லாம்

நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன.

பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும்

யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்;

முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள்.

யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்;

யாழோடும், கீதசத்தத்தோடும்,

எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும்

யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.

கடலும் அதிலுள்ள அனைத்தும்,

உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக.

ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்;

மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும்.

அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்;

ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;

அவர் உலகத்தை நீதியுடனும்,

நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.