Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம் 93
யெகோவா ஆட்சி செய்கிறார், அவர் மாட்சிமையை அணிந்திருக்கிறார்;
யெகோவா மாட்சிமையை அணிந்து பெலத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறார்;
உண்மையில், உலகம் நிலைபெற்று உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது.
உமது சிங்காசனம் பூர்வகாலத்திலே ஏற்படுத்தப்பட்டது;
நீர் நித்தியத்தில் இருந்தே இருக்கிறீர்.
யெகோவாவே, கடல்கள் எழும்பின;
கடல்கள் தங்கள் குரலை எழுப்பின;
கடல்கள் மோதியடிக்கும் தங்கள் அலைகளை எழுப்பின.
பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும்,
கடல்களின் அலைகளைப் பார்க்கிலும்
உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர்.
யெகோவாவே, உமது நியமங்கள் உறுதியாய் நிற்கின்றன;
பரிசுத்தம் உமது ஆலயத்தை
என்றென்றும் அலங்கரிக்கிறது.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.