Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 64

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்;

பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும்.

கொடியவர்களின் சதியிலிருந்தும்,

ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.

அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்;

தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள்.

அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்;

அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள்.

தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்;

தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்;

“நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள்.

அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து,

“நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள்.

நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை.

ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்;

உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள்.

இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி,

அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்;

அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள்.

எல்லா மனிதரும் பயப்படுவார்கள்;

இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து,

அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள்.

நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து,

அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்;

இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்!

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.