Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 61

கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

என் இறைவனே, என் கதறுதலைக் கேளும்,

என் மன்றாட்டுக்குச் செவிகொடும்.

பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;

என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்;

என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.

நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்;

பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர்.

நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்;

உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன்.

இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்;

உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை

நீர் எனக்குத் தந்திருக்கிறீர்.

அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்;

அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும்.

இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக;

அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும்

உண்மையையும் நியமித்தருளும்.

அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்;

நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.