Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 53

மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.

மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான்.

அவர்கள் சீர்கெட்டவர்கள்;

அவர்களுடைய வழிகள் இழிவானவை;

அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

இறைவன் பரலோகத்திலிருந்து

மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,

அவர்களில் விவேகமுள்ளவனாவது

இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.

எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;

நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,

ஒருவனாகிலும் இல்லை.

தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?

மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;

அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை.

பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே,

அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள்.

உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்;

இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!

இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,

யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.