Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 15

தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்?

உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்?

குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள்,

நீதியானதைச் செய்கிறவர்கள்,

உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்;

தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள்,

தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள்,

மற்றவர்களை நிந்திக்காதவர்கள்;

இழிவானவனை அவமதிப்பவர்கள்,

யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்;

ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும்

மனதை மாற்றாதவர்கள்;

ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள்,

குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள்.

இவ்வாறு வாழ்கிறவர்கள்

ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.