Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம் 131
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல,
என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல;
பெரிய காரியங்களிலும்,
எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.
பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல்,
என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்;
என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும்
யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.