Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 97

யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,

திரளான தீவுகள் மகிழட்டும்.

மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;

நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

நெருப்பு அவருக்கு முன்சென்று,

சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.

அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;

பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.

யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,

சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.

வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;

எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.

சிலைகளை வணங்கி,

விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;

தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,

உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.

யெகோவாவே, பூமி அனைத்திற்கும்

நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.

யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;

அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி,

துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.

நீதிமானுக்காக வெளிச்சமும்,

செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.

நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து,

அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.