Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 93

யெகோவா ஆளுகை செய்கிறார்,

மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து,

அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்;

ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது;

நீர் என்றென்றும் இருக்கிறீர்.

யெகோவாவே, நதிகள் எழும்பின;

நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;

நதிகள் அலைதிரண்டு எழும்பின.

திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட,

கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்;

யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக

உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.