Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 75

அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.

உம்மைத் துதிக்கிறோம்,

தேவனே, உம்மைத் துதிக்கிறோம்;

உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது.

நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.

பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது;

அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)

வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்;

துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.

உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்;

உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள்.

கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.

தேவனே நியாயாதிபதி;

ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது,

அதிலிருந்து ஊற்றுகிறார்;

பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து,

யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன்.

துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்;

நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.