Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 29

தாவீதின் பாடல்.

தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;

கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;

பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.

யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;

மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;

யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;

யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.

யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;

யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,

சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.

யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.

யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;

யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.

யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,

காடுகளை வெளியாக்கும்;

அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்

யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;

யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.

யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;

யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,

அவர்களை ஆசீர்வதிப்பார்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.