Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 14

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்;

நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.

எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.

அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?

அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே;

அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.

அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;

தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.

ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,

நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;

யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,

யாக்கோபுக்குச் சந்தோஷமும்,

இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.