Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 136

யெகோவாவை துதியுங்கள்;

அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

தேவாதி தேவனைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது;

பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது;

எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

பார்வோனையும் அவன் சேனைகளையும்

செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது. எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்;

அவர் கிருபை என்றுமுள்ளது.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.