Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 129

ஆரோகண பாடல்.

என்னுடைய சிறுவயது முதற்கொண்டு

அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.

என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும்,

என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.

உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,

தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

யெகோவாவோ நீதியுள்ளவர்;

துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று,

இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.

வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்;

அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.

அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும்,

அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.

யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்;

யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்

என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.