Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 126

ஆரோகண பாடல்.

சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது,

கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும்,

நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;

அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்

என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;

இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

யெகோவாவே,

தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல,

எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.

கண்ணீரோடு விதைக்கிறவர்கள்

கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.

அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்;

ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு

கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.