Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 112

அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து,

அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.

அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும்,

செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்;

அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;

அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.

இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.

அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;

நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்;

அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.

அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்;

அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;

அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.

துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி,

தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்;

துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.