Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 110

தாவீதின் பாடல்.

யெகோவா என் ஆண்டவரை நோக்கி:

நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும்,

நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.

யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்;

நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.

உமது மகத்துவத்தின் நாளிலே

உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்;

அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி

என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்;

மனம் மாறாமலுமிருப்பார்.

உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,

தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.

அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;

எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்;

அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

வழியிலே அவர் நதியில் குடிப்பார்;

ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.