Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 108

தாவீது பாடிய பாடல்.

தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;

நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்;

என்னுடைய மகிமையும் பாடும்.

வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,

நான் அதிகாலையில் விழிப்பேன்.

யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;

தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும்,

உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.

தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;

உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,

உமது வலதுகரத்தினால் இரட்சித்து,

எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.

தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார்,

ஆகையால் சந்தோஷப்படுவேன்;

சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;

எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன்,

யூதா என்னுடைய செங்கோல்.

மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்;

ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்;

பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.

வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?

ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?

எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ?

எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?

இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;

மனிதனுடைய உதவி வீண்.

தேவனாலே வெற்றி பெறுவோம்;

அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.