Skip to content
BibleKenya

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

யோபு 25

பில்தாதின் வார்த்தைகள்

அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:

“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது;

அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.

அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?

அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?

இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?

பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது;

நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ். Copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.