Skip to content
BibleKenya

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு

சங்கீதம் 70

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்;

யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.

என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள்

வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக;

எனது அழிவை விரும்புகிற யாவரும்

அவமானமடைந்து திரும்புவார்களாக.

என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள்,

அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.

ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும்

உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக;

உமது இரட்சிப்பை விரும்புவோர்,

“இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.

நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்;

இறைவனே, என்னிடம் விரைந்து வாரும்.

நீரே என் துணை, நீரே என் மீட்பர்;

யெகோவாவே, தாமதியாதேயும்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு. Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.